ICC தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வேற லெவல் சாதனை படைக்கும் இந்திய அணி!
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் சபை தற்போது வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் அனைத்து இந்திய அணி சிறந்து விளங்குகின்றது.
நடப்பு உலக கோப்பை தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணியை வீழ்த்துவதற்கு ஏனைய அணிகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
அத்துடன், ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளதுடன், டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முதல் இடத்தில் உள்ளதுடன்,பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் நம்பர் ஒன் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் வரிசையில் நம்பர் ஒன் வீரராக ஜடேஜா இருக்கிறார்.
இதேநேரம், டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மட்டும் தான் இந்திய வீரர்கள் முதல் இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.