அணி தேர்வில் 3 தவறுகளை செய்த இந்திய அணி? மறுபடியுமா?

குல்தீப் யாதவுக்கு பேக்கப்பாக வருண் சக்ரவர்த்தியை சேர்த்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அணி தேர்வில் 3 தவறுகளை செய்த இந்திய அணி? மறுபடியுமா?

சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் உள்ள 3 தவறுகள் குறித்து ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அணி வீரர்கள் பட்டியலை ஜனவரி 12ஆம் தேதி வழங்க வேண்டும் என ஐசிசி அறிவித்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டும் வீரர்கள் பட்டியலை அறிவிக்காமல் இருந்தன.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ அறிவித்துள்ளது. 

  • ரோஹித் சர்மா (கேப்டன்)
  • ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்)
  • யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
  • விராட் கோலி
  • ஷ்ரேயஸ் ஐயர்
  • ரிஷப் பந்த்
  • கே.எல்.ராகுல்
  • ஹர்திக் பாண்டியா
  • அக்சர் படேல்
  • ரவீந்திர ஜடேஜா
  • வாஷிங்டன் சுந்தர்
  • முகமது ஷமி
  • ஜஸ்பரீத் பும்ரா
  • குல்தீப் யாதவ்
  • அர்ஷ்தீப் சிங்

இந்திய அணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் பார்ம் சமீப காலமாக திருப்திகரமாக இல்லை. ஏற்nகனவே சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் இருக்கிறார்கள். 

முழு நேர ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இருக்கிறார். இதனால், குல்தீப் யாதவுக்கு பேக்கப்பாக வருண் சக்ரவர்த்தியை சேர்த்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அடுத்து, நிதிஷ் ரெட்டி, ஒரு பேட்டராக தன்னை நிரூபித்திருக்கிறார். அதுவும், பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மைதானங்களில், தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார்.  மேலும், சில ஓவர்களை அபாரமாகவும் வீசியிருந்தார். 

நிதிஷ் ரெட்டியை சேர்த்திருந்தால், இந்திய அணியின் பந்துவீச்சுக்கும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும். மேலும், மிடில் வரிசைக்கும் பலமிக்கதாக அமைந்திருக்கும். 

ரோஹித், ஷுப்மன் கில் கேப்டன், துணைக் கேப்டனாக இருப்பதால், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு அணியில் வேலையே கிடையாது. இதனால், ஜெய்ஷ்வாலுக்கு மாற்றாக நிதிஷ் ரெட்டியை சேர்த்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்திய அணியில் ஜஸ்பரீத் பும்ரா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார். துபாய் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இறுதிப்போட்டி உட்பட 5 போட்டிகளுக்கு இந்த மூன்று பேரே போதுமானதுதான். 

இதனால், அர்ஷ்தீப் சிங் 11 அணியில் இடம்பெற்றாலும், 10 ஓவர்களை முழுமையாக வீச முடியாது. ஆகையால், சமீப காலமாக, உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசும் யுஜ்வேந்திர சஹலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்னர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp