ரகசியமாக களமிறங்கிய இந்திய அணி... கம்பீர் போட்டுள்ள மாஸ்டர் பிளான்!
சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், கம்பீரின் செயல்பாடுகள் பிசிசிஐ-யை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர வந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறியதுடன், இந்திய அணி தோற்காத இடத்தில் எல்லாம் தோல்வியை தழுவியது.
சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், கம்பீரின் செயல்பாடுகள் பிசிசிஐ-யை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எப்படியாவது இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கம்பீர் தீவிரமாக உழைத்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கம்பீருக்கும் முக்கியமானதாக அமைந்து உள்ளது.
மற்ற நாட்டு ஆடுகளங்களை விட ஆஸ்திரேலியாவில் எப்போதுமே பந்து பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் ஆஸ்திரேலிய வீரர்களின் வேக பந்துவீச்சை எதிர்கொள்ள முதலில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா பிட்சின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொண்டுள்ள பயிற்சியாளர் கம்பீர், உலகின் அதிவேகமான மைதானம் என்று பெயர் பெற்ற வாக்கா மைதானத்தில் இந்திய அணிக்கு பயிற்சி தரவுள்ளார்.
பெர்த் நகரில் உள்ள இந்த மைதானமானது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் கைவிடப்பட்டுள்ளதுடன், அங்கு புதிய மைதானம் அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாலில் உள்ள பெர்த் மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் பயிற்சி எடுத்து விளையாடிவிட்டால், அவரால் எந்த மைதானத்திலும் ரன்கள் குவிக்க முடியும் என்பதால், கைவிடப்பட்ட பழைய பெர்த் மைதானத்தில் தற்போது இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள்.
அத்துடன், தாங்களது பயற்சியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக பயிற்சி செய்யும் இடத்தை துணியால் இந்திய அணி நிர்வாகம் மறைத்து உள்ளது.
இதன் மூலம் வெளி உலகத்துக்கு தெரியாத பிரத்தேக பயிற்சியை இந்திய அணி மேற்கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் திகதி தொடங்கவுள்ளதால், இன்னும் 11 நாட்கள் இந்தியாவுக்கு பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்துள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.