ராஷ்மிகாவின் காதலனுடன் மோதும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 3 வில்லன் இவர்தான்?

ராஷ்மிகாவின் காதலனுடன் மோதும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 3 வில்லன் இவர்தான்?

புஷ்பா 2 படத்தின் வெற்றியை தொடந்து அடுத்த பாகம் வரவுள்ளதுடன், அதில், ரவுடி ஹீரோ நடிக்கிறாராம். அவர் யார், எந்த ரோலில் நடிக்கிறார் என்பதை பார்க்கலாம்.

புஷ்பா 2  படத்தில் பெரிய நடிகர்கள் இருந்தும், அவ்வளவு நன்றாக நடித்தும், அல்லு அர்ஜுனின் ஒன் மேன் ஷோவால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்றே கூறலாம். 
இயக்குனர் சுகுமாரின் இயக்கம், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், சாம் சி.எஸ்சின் பின்னணி இசை, ராஷ்மிகா மந்தனா என நட்சத்திர பட்டாளம் வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்தப் படத்திற்கு சில தேசிய விருதுகள் நிச்சயம் என்று சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், புஷ்பா 2 கிளைமாக்ஸில் குண்டு வைத்தது யார்? புஷ்பா 3யில் இன்னொரு ஸ்டாரை காட்டப்போகிறார்களா பெரிய விவாதம் எழுந்துள்ளதுடன், டோலிவுட்டின் ரவுடி ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா தான் அந்த ரோலில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காதலர் நடிப்பது உண்மையா? என்று ஒரு பேட்டியில் ரஷ்மிகாவிடம் கேள்வி எழுப்ப, தனக்குத் தெரியாது என்று பதில் கூறியிருக்கிறார் ராஷ்மிகா.

விஜய் தேவரகொண்டா புஷ்பா 3 படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் உண்மையாக வாய்ப்பு அதிகம். விஜய் தேவர்கொண்டா நடித்தால், புஷ்பா 3 படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும் என்றும் சினிமா விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இந்தப் படம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பின்னரே ஆரம்பமாகும். சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் தங்கள் பணிகளை முடித்த பிறகு இந்தப் படத்தில் கவனம் செலுத்துவார்கள். எனவே, புஷ்பா 3 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp