இனி இந்திய அணியில் இடமில்ல... இளம் வீரருக்கு நேர்ந்த கதி.. ஐபிஎல் தான் ஒரே வழி

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதால் அவருக்கும், மேலும், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

இனி இந்திய அணியில் இடமில்ல... இளம் வீரருக்கு நேர்ந்த கதி.. ஐபிஎல் தான் ஒரே வழி

இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள இளம் வீரர் இஷான் கிஷன் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பே கிடைக்காது என்றும்,  அவர் இனி ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி தெரிவித்துள்ளார்.

துலீப் டிராபி உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் தேர்வாகி உள்ள இஷான் கிஷன், புச்சி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக சதம் அடித்து உள்ளார். துலீப் டிராபி தொடரிலும் ரன் குவிக்கும் பட்சத்தில் அவருக்கு வங்கதேச டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகின்றது.

ஆனாலும், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் போட்டி அதிகரித்து உள்ளதால், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என பாஸித் அலி கூறி உள்ளார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதால் அவருக்கும், மேலும், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

ரோஹித் எடுத்த முடிவு.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. மனம் திறந்த பயிற்சியாளர்!

இதனால், இஷான் கிஷனுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் ஆடுவது சந்தேகம்தான் என பாஸித் அலி சுட்டிக்காட்டி  உள்ளார்.

இஷான் கிஷன் இனி ஐபிஎல் தொடரில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், ஏனெனில், ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டு ஆட முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என பாஸித் அலி குறிப்பிட்டு உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp