மனம் உடைந்த இஷான் கிஷன்.. வெளியான அதிர்ச்சி தரும் உண்மை.. இரக்கம் காட்டாத ரோஹித் -  டிராவிட்!

கடந்த ஒரு வருடமாக இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்ற போதும் இரண்டாம் நிலை மாற்று வீரராக மட்டுமே இஷான் கிஷன் பயன்படுத்தப்பட்டார்.

மனம் உடைந்த இஷான் கிஷன்.. வெளியான அதிர்ச்சி தரும் உண்மை.. இரக்கம் காட்டாத ரோஹித் -  டிராவிட்!

தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில், இந்திய அணி வீரர் இஷான் கிஷன் பாதியில் விலகியமை தொடர்பில் அதிர வைக்கும் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வருடமாக இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்ற போதும் இரண்டாம் நிலை மாற்று வீரராக மட்டுமே இஷான் கிஷன் பயன்படுத்தப்பட்டார்.

2021ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆன இஷான் கிஷன், 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து 210 ரன்கள் குவித்து இருந்தார். 

அதன் பின் நடந்த ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் இஷான் கிஷன் இந்திய அணியில் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தாலும், போட்டிகளில் களமிறங்குவதில் சிக்கல் காணப்பட்டது.

எந்த இடத்தில் இறங்கினாலும் ரன் குவிக்கிறார் என்பதை கண்டு கொண்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர், இஷான் கிஷனை அணியின் நிரந்தர மாற்று பேட்ஸ்மேனாகவே மாற்றினர்.

ஆசிய கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்த போது இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் ஆடினார். 2023 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் காய்ச்சல் ஏற்பட்டு ஓய்வில் இருந்த போது இஷான் கிஷன் துவக்க வீரராக ஆடினார். 

ஆனால், எல்லாமே ஒன்று, இரண்டு போட்டிகள் மட்டுமே. ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் அணிக்கு திரும்பிய உடன் இஷான் கிஷன் தண்ணீர் கொடுக்கும் வேலைக்கு மாறி விடுவார். ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இடம் பெற்று இரண்டு அரைசதம் அடித்தார் இஷான் கிஷன். 

ஆனால், அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் வந்த உடன் இஷான் கிஷன் நீக்கப்பட்டார். அடுத்து தென்னாப்பிரிக்க டி20 தொடரில் புதிய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இஷான் கிஷன் புறக்கணிக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் வெளியே அமர வைக்கப்பட்ட இஷான் கிஷனுக்கு, அடுத்து டெஸ்ட் தொடருக்கு முன் நடக்க இருந்த பயிற்சி போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. 

மொத்த ஆட்டத்தையும் மாற்றிய கேட்ச்.. குழம்பிய நடுவர்கள்.. மிரட்டிய தமிழக வீரர்!

போட்டிகளில் ஆடாத போதும் கடந்த டிசம்பர் 2022 முதல் இப்போது தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் வரை இந்திய அணியுடன் பயணம் மேற்கொண்டு வந்த களைப்பும் சேர்ந்து அவரை மேலும் சோர்வடைய வைத்து இருக்கிறது.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தன்னை டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்குமாறு கூறி இருக்கிறார். அவரது மன நிலையை புரிந்து கொண்ட இந்திய அணி நிர்வாகம் அவரை விடுவித்து உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp