கதை முடிந்தது.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த ஜடேஜா.. சிக்கலில் பிசிசிஐ!

சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளதுடன், இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஆல் - ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா  உள்ளனர். 

கதை முடிந்தது.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த ஜடேஜா.. சிக்கலில் பிசிசிஐ!

ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக வருவதில் மேலும் ஒரு சிக்கலாக ரவீந்திர ஜடேஜா வந்துள்ளார்.

2022 ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 அணியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

அதனால், இந்திய டி20 அணிக்கு பல வீரர்கள் கேப்டனாக செயல்பட்டதுடன், ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி இந்த வருடம் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் களம் இறங்கும் என்று கூறப்பட்டு வந்தது.

இப்போது, காயம் காரணமாக சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

இது இவ்வாறு இருந்தாலும், ரோஹித் சர்மா ஒரு சாதாரண வீரராக மட்டுமே இந்திய அணியில் செயல்படுவார் என்றும் வேறு ஒரு வீரலே டி20 அணி கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விரக்தியில் இந்திய வீரர்.... 25 வயதில் ஓய்வு.... காரணம் பிசிசிஐ... என்ன நடந்தது?

அதனால், காயத்தில் இருந்து குணமடைந்தால் ஹர்திக்  பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். 

அத்துடன், தென்னாப்பிரிக்கா தொடரில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதோடு சூர்யகுமார் கடைசி டி20யின் போது காயத்தால் விலகிய போது கேப்டனாக செயல்பட்டார்.

மேலும், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளதுடன், இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஆல் - ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா  உள்ளனர். 

ஹர்திக் பாண்டியா நல்ல ஆல் - ரவுண்டர் என்ற போதும் அடிக்கடி காயத்தால் பாதிக்கப்படுவதுடன், ஜடேஜா காயத்தால் விலகிய நாட்கள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான விடயங்களால், டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா விரும்பவில்லை என்றாலோ, அல்லது அவருக்கு பின்போ சூர்யகுமார் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக வருவார்கள் என சொல்லப்படுகின்றது.

அதிலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது அரசியல் செல்வாக்கும் உள்ள நிலையில், அவரைத் தாண்டி ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் ஆவது கடினமாக விடயமாகவே பாரக்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp