முதல் முறையாக 42 வயதில் ஐபிஎல்-இல் களமிறங்கும் லெஜண்ட் வீரர்: தட்டித்தூக்க தயாராகும் சிஎஸ்கே!

சமீபத்தில், டெஸ்டில் 700 விக்கெட்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த நிலையில், அவர் 704 விக்கெட்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

முதல் முறையாக 42 வயதில் ஐபிஎல்-இல் களமிறங்கும் லெஜண்ட் வீரர்: தட்டித்தூக்க தயாராகும் சிஎஸ்கே!

யாரும் எதிர்பார்க்காத வகையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில், தனது பெயரை ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிவு செய்துள்ளதுடன், 1.25 கோடி ரூபாய் மதிப்பில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியின் லெஜண்ட் பௌலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 2014ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் கடந்த 10 வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

அவர் மொத்தம் 19 போட்டிகளில் விளையாடி, 7.84 எகனாமியில், 18 விக்கெட்களை எடுத்துள்ளார். அதன்பிறகு, ஆண்டர்சன், அதிகமாக டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 

சமீபத்தில், டெஸ்டில் 700 விக்கெட்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த நிலையில், அவர் 704 விக்கெட்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது எப்போதுமே அதிகமாக சீனியர் வீரர்களை வைத்து, எதிர்பார்க்காத ட்விஸ்ட்களை கொடுத்து வருகின்றது. 

ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ரஹானே, முஸ்தபிசுர் ரஹ்மான், மொயின் அலி போன்ற சீனியர்களை அணிக்குள் கொண்டு வந்து, அவர்களிடம் பெஸ்ட்டை பெற்று, தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியது.

இதனால், 42 வயது ஜேம்ஸ் ஆண்டர்சனை, சிஎஸ்கே வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதுடன், ஆண்டர்சனுக்கு 42 வயது ஆனாலும், அவரால் இன்னமும் துடிப்புடன் பந்துவீச முடியும். 

6 பந்தில் 6 சிக்ஸர் விளாசுவேன்... சாதித்து காட்டுவேன்: சபதம் செய்த இந்திய அணி  வீரர்!

சென்னை சேப்பாக்கம் பிட்சை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட தரமான பௌலர்கள் கிடைக்காததால், யார்க்கர் வீசும் பௌலர்கள், வேகம் குறைந்த பந்துகளை வீசும் பௌலர்களை சிஎஸ்கே ஏலத்தில் வாங்கியது. 

ஆகையால், லைன், லெந்தில் சிறப்பாக செயல்படக் கூடிய ஆண்டர்சனை அணிக்குள் கொண்டு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், ஆண்டர்சனை அடிப்படை தொகையான 1.25 கோடிக்கு வாங்கினால், அவரை ஒரு பயிற்சியாளர் போலவும் பயன்படுத்த முடியும். 

உலகில் இருக்கும் பௌலர்களில், ஆண்டர்சன் தான், மிகவும் அதிக அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர். இதனால், இவரை வாங்கினால், அணிக்கு நல்ல பலனை கொடுக்கும். எனவே, ஆண்டர்சனை அடிப்படை விலையில் வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் எனக் கருதப்படுகிறது. 

மற்ற சில அணிகளும் கூட, ஆண்டர்சனை வாங்க முயற்சி செய்யலாம் என்பதால், ஆண்டர்சன் 3 கோடி வரை கூட ஏலம் போக அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp