இந்தியாவுக்கு வில்லன் வீரனை களமிறக்கிய இங்கிலாந்து.. அடுத்த ஆப்பு ரெடி! என்ன செய்ய போகிறார் ரோஹித்!

அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆண்டர்சனை கண்டாலே, இந்திய அணி வீரர்களுக்கு பயம் ஏற்படும்.

இந்தியாவுக்கு வில்லன் வீரனை களமிறக்கிய இங்கிலாந்து.. அடுத்த ஆப்பு ரெடி! என்ன செய்ய போகிறார் ரோஹித்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து அணியில் முதல் டெஸ்டில் களமிறங்கிய அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஜாக் லீச் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில் ஜாக் லீச்சுக்கு பதிலாக அறிமுக வீரர் சோயிப் பஷீர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். முதல் டெஸ்டில் எந்த விக்கெட்டையும் எடுக்காத மார்க் வுட் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அத்துடன், அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆண்டர்சனை கண்டாலே, இந்திய அணி வீரர்களுக்கு பயம் ஏற்படும்.

ஏனென்றால் இங்கிலாந்து அணியிலேயே அதிக அனுபவம் வாய்ந்த வீரர் ஆண்டர்சன் தான். இதுவரை இந்தியாவுக்கு ஐந்து முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஆறாவது முறையாக விளையாட உள்ளார்.

இந்திய வீரர்களுக்கு தண்ணீர் காட்டும் ஆண்டர்சன், கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவியதற்கு  அவரின் பங்கு முக்கியமானதாக காணப்பட்டது.

அதுமட்டுமின்றி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலேயே இந்தியாவுக்கு எதிராக தான் அதிக விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தி உள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன்139 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 

ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவர்,  இதேபோன்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் தன்னுடைய திறமையால் மிரள வைத்து, இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.

ஆண்டர்சனின் பந்து வீச்சு வலது கை பேட்ஸ்மன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், இவருடைய பந்துவீச்சில் விராட் கோலி அதிக முறை ஆட்டம் இழந்திருக்கிறார். 

இதனால், ரோகித் சர்மா, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆண்டர்சன் கடும் நெருக்கடி ஏற்படுத்துவார் என தெரிகிறது. ஆனால் ஆண்டர்சனுக்கு தற்போது 41 வயது ஆகிவிட்ட நிலையில், கடைசியாக நடைபெற்ற ஆசஸ் தொடரில் அவர் சரியாக செயல்படவில்லை.

நான்கு டெஸ்ட் போட்டியில் மொத்தமாகவே ஐந்து விக்கெட் எடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தார். தற்போது ஆண்டர்சன் கடும் பயிற்சியை எடுத்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கிறார். மேலும், ஆண்டர்சன் இன்னும் பத்து விக்கெட்டுகளை எடுத்தால் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.

இந்த நிலையில், இந்த இரண்டு மாற்றங்களை தவிர இங்கிலாந்து அணியில் அதே வீரர்கள் தான் களமிறங்குகிறார்கள். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp