ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த பும்ரா... கபில்தேவ் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த பும்ரா... கபில்தேவ் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா 53 விக்கெட்கள் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.

முன்னதாக, கபில் தேவ் ஆஸ்திரேலிய மண்ணில் 51 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்த நிலையில், பும்ரா அதனை முறியடித்து உள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா 9 விக்கெட்களை வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுடன், பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

அத்துடன், சிராஜ் 2 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன், இரண்டாவது இன்னிங்ஸிலும் கலக்கிய பும்ரா, 3 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். 

ஆஸ்திரேலிய மண்ணில் கபில் தேவின் பவுலிங் சராசரி 24.58 என்பதுடன், பும்ரா 17.21 என்ற பவுலிங் சராசரியுடன் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp