ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு... ரோஹித் சர்மா என்ன செய்தார் - பும்ரா சொன்ன தகவல்!

இஷான் கிஷன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளித்த நிலையில், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் பும்ரா தனது பணியை செய்தார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு... ரோஹித் சர்மா என்ன செய்தார் - பும்ரா சொன்ன தகவல்!

நடந்து முடிந்த ஐபில் சீசனில் மும்பை அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டனான ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அம்பானி குடும்பத்தினர் அறிவித்தனர்.

இதன் காரணமாக மும்பை அணி வீரர்கள் பிளவுப்பட்டதுடன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக இருந்தனர்.

இஷான் கிஷன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளித்த நிலையில், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் பும்ரா தனது பணியை செய்தார்.

ஆனால் மும்பை அணியின் ரசிகர்கள் பலரும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக இருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா எதனை பற்றியும் கவலைப்படாமல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆனால் டி20 உலகக்கோப்பை இறுதியில் இந்திய அணி வென்ற போது, மும்பை ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவை கொண்டாடினர். 

இந்த விவகாரம் குறித்து பும்ரா பேசுகையில், “இந்தியாவை பொறுத்தவரை சில நேரங்களில் ரசிகர்களும், வீரர்கள் கூட எமோஷனலாக இருப்பார்கள். ஆனால் இந்திய அணிக்காக விளையாடும் போது எங்களை எந்த எமோஷனும் பாதிக்காது.

ஆனால், சொந்த அணியின் ரசிகர்களே திட்டினால் என்ன செய்வது? ஏனென்றால் நிச்சயம் ரசிகர்களின் எமோஷன் வீரர்களை பாதிப்படைய செய்யும். ஒரு அணியாக எப்போதும் நாங்கள் எதிர்ப்பை ஆதரிக்க மாட்டோம். 

ஹர்திக் பாண்டியாவுடன் அப்போது தொடர்ந்து பேசி வந்தோம். அந்த எதிர்ப்புகள் டி20 உலகக்கோப்பையை வென்ற பின் மாறிவிட்டது. 

அதனால், ரசிகர்களின் எதிர்ப்பை அவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டாம். கால்பந்து விளையாட்டில் கூட ரசிகர்கள் ஒரு வீரரை கடுமையாக எதிர்ப்பதை பார்த்திருக்கிறோம். 

ஐபிஎல் தொடராக இருந்தாலும், இந்திய அணிக்காக விளையாடினாலும் எப்போதும் நாங்கள் அனைவரும் யாரையும் விட்டுக் கொடுத்ததில்லை. 
ஹர்திக் பாண்டியாவுடன் நான் நீண்ட ஆண்டுகளாக விளையாடி வந்திருக்கிறேன். அவருக்கு உதவி தேவையென்றால், அனைவரும் தயாராக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp