தீயாய் பந்துவீசும் பும்ரா.. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கி இருப்பதாக பார்க்கப்பட்டது. 

தீயாய் பந்துவீசும் பும்ரா.. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததுடன், உஸ்மான் கவாஜா மற்றும் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.  நிதீஷ் குமார் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கி இருப்பதாக பார்க்கப்பட்டது. 

இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் உஸ்மான் கவாஜா - மெக்ஸ்வீனி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணியின் பும்ரா பந்தை எதிர்கொள்ள தொடக்கம் முதலே மெக்ஸ்வீனி தடுமாறினார். 

பும்ரா வீசிய 2வது ஓவரிலேயே மெக்ஸ்வீனி 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கள நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், பும்ரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து டிஆர்எஸ் எடுக்கலாம் என்று முடிவு செய்து அப்பீலுக்கு சென்றனர். 

தொடர்ந்து லபுஷேன் - கவாஜா கூட்டணி இணைந்தது. ஆனால் அவரும் பும்ராவை சமாளிக்க முடியாமல் தடுமாற, வேறு வழியின்றி உஸ்மான் கவாஜா தாமாக முன் வந்து பும்ராவை எதிர்கொள்ள தயாரானார்.  பும்ரா வீசிய 4வது பந்தில் கவாஜா பேட்டில் உரசி நேராக விராட் கோலியின் கைகளில் சென்று விழுந்தது. 

இதனால் அவர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் களம் புகுந்தார். இதனால் பும்ரா vs ஸ்டீவ் ஸ்மித் என்று ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகினர். ஆனால் முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தி பும்ரா பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். 
அதனை ஸ்டீவ் ஸ்மித் ரிவ்யூ செய்ய கூட முயற்சிக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின், பும்ரா தனது பவுலிங்கில் அட்டகாசமான செயல்பட்டு வருகின்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp