உச்சத்தில் இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வு... ரோஹித் சர்மா அதிரடி தீர்மானம்!
நடப்பாண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து 20 இன்னிங்ஸ்களில் விளையாடிய பும்ரா மொத்தமாக 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலமாக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பும்ரா 164 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
அத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்ற பும்ரா 70 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின் சாதனையையும் முறியடித்தார்.
முக்கிய சாதனையை நோக்கி ஜடேஜா: இன்னும் 1 விக்கெட் எடுத்தால் போதும்!
மேலும், வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றொரு சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.
நடப்பாண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து 20 இன்னிங்ஸ்களில் விளையாடிய பும்ரா மொத்தமாக 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த பட்டியலில் 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 43 விக்கெட்டுகளுடன் இலங்கை அணியின் ஸ்பின்னரான ஹசரங்கா 2வது இடத்தில் உள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்னும் தொடங்கவுள்ளது.
இந்த மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் அல்லது யாஷ் தயாளுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள நிலையில், பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.