முக்கிய பந்துவீச்சாளரை நீக்க திட்டம்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. என்ன நடந்தது?

மூன்றாவது போட்டியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் களம் இறக்க இந்திய அணியில் முடிவு செய்தால் அது முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பாக இருக்கலாம்.

முக்கிய பந்துவீச்சாளரை நீக்க திட்டம்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. என்ன நடந்தது?

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ள இந்திய அணியில் பிளேயிங் லெவனில் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் பும்ரா நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா விளையாடினர். இரண்டாவது போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா செயல்பட்டனர். 

இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் களம் இறக்க இந்திய அணியில் முடிவு செய்தால் அது முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பாக இருக்கலாம்.

முடிவுக்கு வரும் ரோஹித் சர்மா சகாப்தம்... கம்பீர் பார்த்த வேலை... இளம் வீரர் மீது கவனம் செலுத்துவது ஏன்?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாட இருக்கிறார். அதற்கு முன் அவருக்கு சிறிய ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படக்கூடும். 

இந்த காரணத்துக்காவே இரண்டாவது போட்டியில் முகமது சிராஜ் ஓய்வில் இருந்தார். ஒருவேளை இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அவசியம் என நினைத்தால் பும்ரா விளையாடுவார்.

மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதுடன், முதல் நாள் வேகப்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. 

அப்படி, மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கினால் வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு அளிக்கப்படுவதுடன், அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு மாற்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. 

அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. எனவே, அவர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இருந்து விடுவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

உத்தேச இந்திய அணியின் விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சுப்மன் கில், விராட் கோலி
ரிஷப் பண்ட்
சர்ஃபராஸ் கான்
ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
வாஷிங்டன் சுந்தர் (அல்லது) பும்ரா.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp