பும்ரா படைத்த வரலாற்று சாதனை... பதிவான வரலாற்று நிகழ்வு!

முதல்முறையாக முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இரண்டு அணிகளின் கேப்டனாக இடம் பெற்று உள்ளதுடன், இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும். 

பும்ரா படைத்த வரலாற்று சாதனை... பதிவான வரலாற்று நிகழ்வு!

இந்திய அணியின் கேப்டன் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இணைந்து முதல் டெஸ்ட் போட்டியின் துவக்கத்திலேயே வரலாற்று சாதனை படைத்து உள்ளனர்.

கடந்த 1996 முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று உள்ளன.

இதில் முதல்முறையாக முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இரண்டு அணிகளின் கேப்டனாக இடம் பெற்று உள்ளதுடன், இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும். 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாக பாட் கம்மின்ஸ்  தலைமையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விடுப்பில் இருக்கின்ற நிலையில், அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா தற்காலிக கேப்டனாக பதவி ஏற்றார். 

இதனையடுத்து, அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மற்றும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேப்டன்களாக செயல்பட்டு பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு முன் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வேகப் பந்துவீச்சாளர் கபில் தேவ் தான். அவர் 1983 முதல் 1987 வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். 

அதன் பின் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா முன்பே ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். மீண்டும் கேப்டனாக தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளார் பும்ரா.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி பெர்த் மைதானத்தில் துவங்கியதுடன்,  இந்த போட்டியில் கேப்டனாக டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp