ஐசிசி தரவரிசையில் எந்த இந்திய வீரரரும் செய்யாத சாதனை.. புதிய வரலாறு படைத்த பும்ரா!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா, ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பவுலர்கள் யாருமே செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார். 

ஐசிசி தரவரிசையில் எந்த இந்திய வீரரரும் செய்யாத சாதனை.. புதிய வரலாறு படைத்த பும்ரா!

147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை எந்த இந்திய அணி பந்துவீச்சாளரும் 907 புள்ளிகளை பெற்றதேஇல்லை என்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 907 புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்து புதிய வரலாறு படைத்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என்று இந்திய பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்த காலம் மாறி, முதல்முறையாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டை தன் பக்கம் திருப்பி இருக்கின்றார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா, ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பவுலர்கள் யாருமே செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார். 

2016ஆம் ஆண்டு ஐசிசி பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்த நிலையில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில், ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் பும்ரா 907 ரேட்டிங் புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.

இதன் மூலமாக 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 907 புள்ளிகளை பெற்ற முதல் இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளதுடன்,  சர்வதேச அளவில் 907 புள்ளிகளை எட்டிய 17வது பவுலர் என்ற டெரிக் அண்டர்வுட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். 

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஐசிசி டாப் 10 தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு இந்திய பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் 4வது இடத்தை பிடித்துள்ளார். 

அதேபோல், ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 12வது இடத்திலும் இருக்கிறார். விராட் கோலி 24வது இடத்துக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 40வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர். நிதிஷ் குமார் ரெட்டி 20 இடங்கள் முன்னேறியுள்ளதுடன், 53வது இடத்தை பிடித்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp