புதிய உச்சம் தொட்ட பும்ரா... ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த சரித்திர சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கின்றார்.

புதிய உச்சம் தொட்ட பும்ரா... ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த சரித்திர சாதனை

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா மாபெரும் வரலாற்று சாதனை படைத்து உள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளதுடன், ஐந்தாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா 46 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்தார்.

அதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கின்றார்.

1977ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் 31 விக்கெட்களை வீழ்த்திய பிஷன் சிங் பேடியின் சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்த நிலையில், 46 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்து இருக்கிறார். 

சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களுக்கு உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லாபுஷேன் விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் பும்ரா இந்த தொடரில் மொத்தமாக 32 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். 

அடுத்து முகமது சிராஜ் 12வது ஓவரில் அடுத்தடுத்து சாம் கான்ஸ்டாஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்களை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில், 32 விக்கெட்டுக்களுடன் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.

31விக்கெட்டுக்களுடன் பிஷன் சிங் பேடி அடுத்த இடத்திலும், 28 விக்கெட்டுக்களுடன் பி எஸ் சந்திரசேகர், 25 விக்கெட்டுக்களுடன் ஈ ஏ எஸ் பிரசன்னா மற்றும் 25 விக்கெட்டுக்களுடன் கபில் தேவ் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp