நான்காவது டெஸ்டில் பும்ரா படைக்கப் போகும் யாரும் தொடவே முடியாத மெகா சாதனைகள்!

இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜஸ்பிரிட் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலைில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்ள கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நான்காவது டெஸ்டில் பும்ரா படைக்கப் போகும் யாரும் தொடவே முடியாத மெகா சாதனைகள்!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஏராளமான சாதனைகளை படைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரும் 26ஆம் திகதி மெல்போர்னில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால், குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா படைப்பார்.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருப்பதால், நான்காவது போட்டியில் வெல்லும் அணிக்கு, பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இருநாட்டு ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜஸ்பிரிட் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலைில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்ள கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 194 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அடுத்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

அத்துடன், ஒட்டுமொத்தமாக விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பும்ரா பிடிப்பார். 37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 

அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைப்பார்.

1991 மற்றும் 1992ல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலமாக ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றார். 

33 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு பும்ராவுக்கு தற்போது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp