தடுமாறும் இளம் வீரர்... பயிற்சியில் கடும் சொதப்பல்.. கடுப்பில் கம்பீர்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
இங்கிலாந்து தொடரில் இரண்டு போட்டிகளில் இரட்டை சதம் அடித்து ஜெய்ஸ்வால் 200 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார்.
இந்த சூழலில் ஜெய்ஸ்வால், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெய்ஸ்வால் தற்போது பயிற்சி முகாமில் தடுமாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஜெய்ஸ்வால் தனது ஓய்வு நேரத்தில் எந்த பயிற்சியும் செய்யாமல் ஹாமில்டன் என்ற இங்கிலாந்து பெண்ணுடன் சுற்றிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் தற்போது சென்னையில் உள்ள பயிற்சி முகாமில் பங்கு பெற்று பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக தடுமாறி இருக்கின்றார்.
குறிப்பாக பும்ராவை எதிர்கொண்ட போது தொடர்ந்து போல்ட் ஆகி இருக்கிறார். முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருந்த போதும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
வங்கதேசத்தில் தற்போது இடம் பெற்றுள்ள நஹித் ராணா என்ற வீரர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அசத்தி உள்ள நிலையில், அதேபோல் ஒரு வேகத்தை அவர் இந்தியாவிலும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது ஜெயிஷ்வாலுக்கு ஆபத்தாக அமையும்.
வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த பிரச்சனையை ஜெய்ஸ்வால் சரி செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது
இந்த நிலையில், அவரின் செயற்பாடுகளால் பயிற்சியாளர் கம்பீர் கடுப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.