ரோஹித் சர்மா அவ்வளவுதான்? இந்திய அணியின் கேப்டனாக பும்ரா.. அதிருப்தியில் ரசிகர்கள்
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடலை இந்திய அணியானது 0 - 3 என இழந்து இருக்கிறது.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடலை இந்திய அணியானது 0 - 3 என இழந்து இருக்கிறது.
இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறாததுடன், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் மிக மோசமாக விளையாடி இருந்தனர்.
6 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 91 ரன்களும், விராட் கோலி 93 ரன்களும் மட்டுமே எடுத்துள்ள நிலையில், இருவரையும் அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
உண்மையை ஒப்புக்கொண்ட ரோகித் சர்மா... விரைவில் ஓய்வு முடிவு? என்ன சொன்னார் தெரியுமா?
இந்த நிலையில், வரும் நவம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுவரை இந்திய மண்ணில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததே இல்லை.
ஆனால், முதல் தடவையாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து உள்ள நிலையில், ரோஹித் சர்மாவின் மோசமான கேப்டன்சி இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என பார்க்கப்படுகின்றது.
இதனால், ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிப்பதுடன், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆக இருக்கும் பும்ராவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
அத்துடன், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டை துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் போனால் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதுடன், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கவும் வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.