டெஸ்ட் அணியில் திடீரென பும்ரா நீக்கம்.. கம்பீர் அதிரடி.. நடந்தது என்ன?
இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்திய அணி அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், இந்த தொடரில் இருந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனான பும்ரா நீக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
மூன்று மாத காலத்தில் இந்த எட்டு டெஸ்ட் போட்டிகளும் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வலுவானவை என்பதால் பும்ரா இந்த எட்டு போட்டிகளிலும் பங்கேற்க வேண்டிய அவசியம் உள்ளது.
பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்றால், நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்பதால், அவருக்கு இப்போதே ஓய்வு அளித்து விட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் முழுமையாக பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருக்கிறது.
கம்பீர் சொன்ன அறிவுரையை குப்பையில் வீசிய கோலி மற்றும் கெத்து காட்டிய சீனியர்கள்.. நடந்தது என்ன?
அதன் காரணமாகவே, பும்ராவுக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த டெஸ்ட் தொடரில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு விட்ட முகமது ஷமியை ஆட வைக்கவும் பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.