பும்ராவை வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ... இறுதி இரண்டு டெஸ்ட்டில் நீக்கம்... இந்திய அணிக்கு அடுத்த அடி!

ஐந்து போட்டிகள் கொண்ட ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விராட் கோலி விலக, முதல் போட்டியில் மட்டுமே ஆடிய கே எல் ராகுல் காயம் காரணமாக விலகினார். 

பும்ராவை வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ... இறுதி இரண்டு டெஸ்ட்டில் நீக்கம்... இந்திய அணிக்கு அடுத்த அடி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் விலகி உள்ள நிலையில், தற்போது பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விராட் கோலி விலக, முதல் போட்டியில் மட்டுமே ஆடிய கே எல் ராகுல் காயம் காரணமாக விலகினார். 

ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வேகப் பந்துவீச்சாளர் பும்ராவை பிசிசிஐ நீக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

70 டெஸ்ட்களில் கோலியின் சாதனையை காலி செய்த ஜடேஜா.. அடுத்து சச்சினை நோக்கி!

கடந்த டிசம்பர் மாத இறுதி முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பும்ரா தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி இருக்கிறார். 

அடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள பும்ரா, அதன் பின் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு, இடைவிடாது பல மாதங்கள் கிரிக்கெட் ஆட வேண்டிய நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டால், 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த விஷயத்தை கவனமாக கையாள பிசிசிஐ தீர்மானித்துள்ளது.

மூன்று போட்டிகளின் முடிவில் 2 - 1 என முன்னிலை இந்திய அணி பெற்றுள்ளதுடன், நான்காவது போட்டியில் வென்றால் இந்தியா தொடரை கைப்பற்றும். 

இந்த நிலையில், இந்தியா நான்காவது போட்டியில் வெற்றிப்பெற்றால் பும்ரா ஐந்தாவது போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும், இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால், ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp