ரோஹித் செய்த சொதப்பல்... உண்மையை போட்டு உடைத்த பும்ரா.. விவரம் இதோ!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த முடிவு தவறானது என பும்ரா தெரிவித்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த முடிவு தவறானது என பும்ரா தெரிவித்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வாடிக்கை என்ற போதும், ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
காபா மைதானத்தின் முந்தைய போட்டி முடிவுகள் தான் அவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்பதுடன், இதற்கு முன் நடந்த ஐந்து போட்டிகளில் முதலில் பந்து வீசிய அணியே வெற்றி பெற்று உள்ளது.
இந்த போட்டியின் முதல் நாள் மழை பெய்யும் என்பதை அறிந்து, அந்த நேரத்தில் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் ரோஹித் இந்த முடிவை எடுத்த நிலையில், அவரது முடிவு தவறாக அமைந்தது.
இந்திய அணி மூன்றாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 13 ஓவர்கள் வீசிய நிலையில் பந்து பெரிதாக ஸ்விங் ஆகவில்லை. பந்தின் ஸீம் பிட்ச்சில் பெரிதாக வேலை செய்யவில்லை.
ஐந்தாவது ஓவரை வீசிய பும்ரா பந்து ஸ்விங் ஆகவில்லை என்பதை அருகே நின்று இருந்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கூறியதுன், அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
பந்து ஸீம் ஆகவில்லை என்பதையும், எந்த இடத்தில் பிட்ச் செய்தாலும் ஸீம் வேலை செய்யவில்லை எனவும் பும்ரா கூறினார். இரண்டாவது நாள் அன்றும் பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த பிட்ச்சில் வேகம் மற்றும் பவுன்ஸ் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களின் ஆயுதமாக இருக்க முடியும் என்பதால் அதை இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் செயல்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் வீசுவார்கள் என்பதால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாகவும் இருக்கும் என்பதுடன், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் ரோஹித் எடுத்த முடிவு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும்.