ஜெய்ஷாவின் அதிரடி தீர்மானம்.. பிசிசிஐயில் இனி இல்லை... நடக்க போகும் அதிரடி மாற்றம்!

ஜெய்ஷா, குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து பிறகு பிசிசிஐயில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். 

ஜெய்ஷாவின் அதிரடி தீர்மானம்.. பிசிசிஐயில் இனி இல்லை... நடக்க போகும் அதிரடி மாற்றம்!

உலகில் மிக பணக்கார கிரிக்கெட் வாரியமாகவும், ஐசிசியை ஆட்டிப்படைக்கும் சக்தியாகவும் இந்தியாவின் பிசிசிஐ பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் ஐசிசி யில் தற்போது அதிரடி மாற்றம் ஒன்று நடக்க இருக்கிறது.

ஜெய்ஷா, குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து பிறகு பிசிசிஐயில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். 

பிசிசிஐ தலைவர் பொறுப்பு தான் பெரியது. தலைவர் சொல்லி தான் அனைத்து விஷயங்களும் நடக்கும். ஆனால் ஜெய்ஷா செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது ஒரு மறைமுக தலைவர் போல் தான் செயல்பட்டு வந்தார்.

பிசிசிஐ தொடர்பான எந்த அறிவிப்பாக இருந்தாலும் தலைவர் பெயர் வராமல் செயலாளரான ஜெய்ஷாவின் பெயர்தான் வரும். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்த முடித்தது. மைதானங்களை உலக தரத்திற்கு மாற்றியது, போன்ற பல விஷயங்களில் ஜெயிஷா முயற்சி எடுத்து இருக்கிறார். 

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடருக்கு மத்திய அரசு விதிக்கப்படும் வரியை பிசிசிஐ கொடுக்காமல் ஐசிசி தான் அதையும் கொடுக்க வேண்டும் என்று விதியை மாற்ற ஒப்புக்கொள்ள வைத்தார். 

மேலும் ஐசிசிக்கு கிடைக்கும் வருமானத்தில் மிகப்பெரிய பங்கு பிசிசிஐக்கு தான் கிடைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து மாற்றினார். 

பிசிசிஐ செயலாளர் என்ற பதவியில் மட்டும் இல்லாமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பொறுப்பிலும் ஜெய்ஷா இருந்து வந்தார் இந்த நிலையில் ஐசிசி யின் புதிய தலைவருக்கான பொறுப்பில் ஜெயிஷா களமிறங்க இருக்கிறார். 

தற்போது ஐசிசியின் தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்கலே இருந்து வருகிறார். அவருடைய பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஜெய்ஷா தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப் போகிறார். 

இதன் மூலம் என் சீனிவாசன், ஷசாங் மனோகர் ஆகியவர்களுக்கு பிறகு ஐசிசி யின் தலைவராக போகும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமை ஜெய்ஷாவுக்கு சேரும். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...