ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ள ரோகித், கோலி... எப்போது தெரியுமா?

வரவுள்ள ஏழு மாதத்தில் இந்தியா வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாட உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ள ரோகித், கோலி... எப்போது தெரியுமா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பின்னர் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விடைபெறப் போகும் தகவல் வெளியாகி உள்ளது. 

அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெறும் நிலையில்,  ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகி விடும். விராட் கோலிக்கு 38 வயதாகிவிடும். 
இதனால், இருவரும் இந்த தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ள சூழலில் ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டு நடைபெறுகிறது. 

இந்த தொடரில் சீனியர் வீரர்கள் பங்கு பெறுவார்கள் என ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில், அதுதான் இந்த மூன்று வீரர்களுக்கும் கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டி தொடராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி, ரோகித் சர்மா என இருவருக்குமே வயதாகி விட்டதால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவெடுத்திருக்கிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர் எவ்வாறு கடைசி வரை டெஸ்ட் போட்டி மட்டும் விளையாடினாரோ அதேபோல் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் ஒரு நாள் போட்டியிலிருந்து விலக உள்ளனர்.

டி20 உலக கோப்பையை வென்றது போல் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரையும் வென்று கௌரவமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் வரவுள்ள ஏழு மாதத்தில் இந்தியா வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாட உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp