இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அதிரடி மன்னன்... ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒரு காலத்தில் ஆசியாவில் சிறப்பான திகழ்ந்த இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தடுமாறி வருகிறது.

ஒரு காலத்தில் ஆசியாவில் சிறப்பான திகழ்ந்த இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தடுமாறி வருகிறது.
1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி அதன் பிறகு 2007, 2011 என இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றதுடன், 2014 டி20 உலக கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால், ஜயவர்த்தன, சங்கக்கார, தில்சான் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற நாளில் இருந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது.
பின்னைய நாட்களில் ஒரு ஆசிய கோப்பை மட்டும் இலங்கை வென்றாலும் தற்போது உள்ள பெரிய தொடர்களின் முதல் சுற்றிலே தோல்வியை தழுவி வெளியேறி வருகிறது.
இந்த நிலையில், டி20 உலக கோப்பையில் இலங்கை தோல்வியை தழுவிய பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
ஏற்கெனவே இலங்கை சரியாக விளையாடாததால் அந்த அணி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இதனால் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்த வேண்டும்.
இந்த நிலையில், இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக அதிரடி மன்னன் சனத் ஜயசூர்ய நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கைக்கான 110 டெஸ்ட் விளையாடி 6973 ரன்கள், 445 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஜயசூர்ய 13,430 ரன்கள் அடித்திருக்கிறார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆக்ரோஷமாக செயல்படும் சனத் ஜயசூர்ய இலங்கை அணியின் சரிவை சரி கட்டுவார் என்று நம்பப்படுகிறது.