மீண்டும் விராட் கோலியை சீண்டிய பாகிஸ்தான் வீரர்.. ரசிகர்கள் கொதிப்பு... நடந்தது என்ன?

முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான், சமூக வலைதளங்களில் விராட் கோலியை சீண்டும் வகையில் பதிவிட்டு உள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் விராட் கோலியை சீண்டிய பாகிஸ்தான் வீரர்.. ரசிகர்கள் கொதிப்பு... நடந்தது என்ன?

முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான், சமூக வலைதளங்களில் விராட் கோலியை சீண்டும் வகையில் பதிவிட்டு உள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்கக் கூடாது என்றும், அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளதாகவும், கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்க்க மறுப்பதாகவும், சிலர்  குற்றச்சாட்டுக்களைவைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி ஐபிஎல் தொடரில் 67 பந்துகளில் அவர் எட்டாவது ஐபிஎல் சதம் சதம் அடித்ததை பலரும் பாராட்டினாலும், சிலர் மெதுவாக அடிக்கப்பட்ட சதம் என விமர்சனம் செய்தனர். 

இதனையடுத்து, ஜுனைத் கானும் அதை சுட்டிக் காட்டி விராட் கோலியை கிண்டல் செய்திருந்ததுடன், ஐபிஎல் தொடரிலேயே மெதுவாக சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததுடன், அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 33.33 என்பதாக இருந்தது.

அதனை தொடர்ந்து ஜுனைத் கான்,  'ஸ்ட்ரைக் ரேட் 33.33' என குறிப்பிட்டு பதிவிட்டதுடன், அதன் மூலம் விராட் கோலி மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதை அவர் கிண்டல் செய்து இருக்கிறார். இதனையடுத்து, விராட் கோலி ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜுனைத் கான், விராட் கோலி இருவரும் மூன்று போட்டிகளில் சந்தித்து உள்ளதுடன், அந்த மூன்று போட்டிகளில் ஜுனைத் கான் 24 பந்துகள் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
I

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp