கேப்டனாகும் வாய்ப்பு... குழப்பத்தில் சூரியகுமார் யாதவ்? நடந்தது என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சீசனில் அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த பதவிக்கு வந்தார்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா ஆறு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சீசனில் அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த பதவிக்கு வந்தார்.
இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தற்போது டி20 கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது சூரியகுமார் யாதவ் இருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது என்பதால், ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சூரிய குமாரை தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
தங்களது அணிக்கு வந்தால் அதிக பணம் மற்றும் கேப்டன் பதவி தருவதாக என்று ஷாருக்கான் அணி கூறியுள்ளதால், சூரியகுமார் யாதவ் தற்போது குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல சீசனில் விளையாடிய சூரியகுமார் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், தற்போது சூரியகுமார் யாதவுக்கு பெரிய அளவில் சம்பளமும் மும்பை அணியில் கிடைக்கவில்லை என்பதுடன், ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக சூரியகுமார் யாதவ் கொல்கத்தா அணிக்கு வர வாய்ப்புகள் அதிகம்.