கேப்டன் பதவி தேவையில்லை.. அதிரடி தீர்மானம் எடுத்த கே எல் ராகுல்.. நடந்தது என்ன?

லக்னோ அணியில் அனுபவம் வாய்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா  உள்ள நிலையில், அவர்கள் இருவரில் ஒருவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேப்டன் பதவி தேவையில்லை.. அதிரடி தீர்மானம் எடுத்த கே எல் ராகுல்.. நடந்தது என்ன?

2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கே எல் ராகுல் கேப்டனாக இருக்கப் போவதில்லை என்றும், ஒரு வீரராக மட்டும் இடம் பெற விரும்புவதாக ராகுல் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் தோல்வி அடைந்த போது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே எல் ராகுலை மைதானத்திலேயே வைத்து கடுமையாக பேசியமை ரசிகர்களுக்கு நினைவில் இருக்கும்.

இந்த நிலையில், சஞ்சீவ் கோயங்காவை நேரில் சந்தித்து பேசியுள்ள கே எல் ராகுல், தான் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், பேட்ஸ்மேன் ஆக மட்டும் விளையாட விரும்புவதாகவும் கூறி இருக்கிறார். 

இதனையடுத்து, அதை சஞ்சீவ் கோயங்கா ஏற்றுக் கொண்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

லக்னோ அணியில் அனுபவம் வாய்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா  உள்ள நிலையில், அவர்கள் இருவரில் ஒருவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், சஞ்சீவ் கோயங்கா தான் கே எல் ராகுலை கேப்டன்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கூறி இருப்பார் என சமூக வலை தளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp