3ஆவது டெஸ்டில் இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்... மீண்டும் அணிக்குள் வரும் வீரர்!

இரண்டாவது டெஸ்டில் விளையாடிய வீரர்களை மூன்றாவது டெஸ்டிலும் விளையாட வைக்கவேண்டும் என்ற முடிவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோர்  இருக்கிறார்கள்.

3ஆவது டெஸ்டில் இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்... மீண்டும் அணிக்குள் வரும் வீரர்!

நியூசிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்ஸ் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெறும் வேகத்தில் விளையாட உள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியதுடன், 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில், ஆறுதல் வெற்றியைப்பெற நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி,ஜடேஜா, கில் போன்ற வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருவதால், இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. 

முதல் டெஸ்டில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ்கான் இரண்டாவது டெஸ்டில் தடுமாறியதுடன், அஸ்வின் ஜடேஜா ஆகியோரும் பெரிய தாக்கத்தை பந்துவீச்சில் ஏற்படுத்தவில்லை.

பும்ராவும் விக்கெட் எடுக்க தடுமாறியதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் அதிரடியாக நீக்கப்பட்ட கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவார்கள் என தகவல் வெளியானது.

ஆனால், இரண்டாவது டெஸ்டில் விளையாடிய வீரர்களை மூன்றாவது டெஸ்டிலும் விளையாட வைக்கவேண்டும் என்ற முடிவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோர்  இருக்கிறார்கள்.

பந்துவீச்சில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஆகாஷ் தீப்க்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இரண்டாவது டெஸ்டில் சாஃபராஸ் தடுமாறினாலும், 3வது டெஸ்டில் அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன், ரோகித் சர்மாவும் விராட் கோலியும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் கடும் விமர்சனங்களை சந்திக்கும் என்பது நிச்சயம்.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

ரோகித் சர்மா
ஜெய்ஸ்வால்
சுப்மன் கில்
விராட் கோலி
சர்ஃபராஸ் கான்
ரிஷப் பண்ட்
ஜடேஜா
அஸ்வின்
வாசிங்டன் சுநதர்
பும்ரா
ஆகாஷ் தீப்/சிராஜ்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp