டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் கேஎல் ராகுல்? என்ன செய்தார் தெரியுமா?
கில்லுக்கு காயம் என்பதால் கடைசி நேரத்தில் அணிக்குள் சர்பராஸ் கான் வந்ததுடன், தற்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
கே எல் ராகுலின் சொந்த ஊரான பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில், அவர் சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆன கே எல் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் ஒரு அரை சதம் அடித்திருந்தால், நிச்சயம் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம் என்ற போதும், ராகுல் வெறும் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அத்துடன், இளம் வீரர் சர்பிராஸ் கான் 150 ரன்கள் அடித்து ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று உள்ளதுடன், வங்கதேச தொடரில் கே எல் ராகுல் முழு உடல் தகுதி பெற்றுவிட்டார் என்பதால் சர்பராஸ் கானுக்கு முதலில் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கில்லுக்கு காயம் என்பதால் கடைசி நேரத்தில் அணிக்குள் சர்பராஸ் கான் வந்ததுடன், தற்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
இந்த சூழ்நிலையில் 150 ரன்கள் அடித்த வீரரை அணியை விட்டு நீக்குவது என்பது சரியாக இருக்காது என்பதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலை அணியை விட்டு நீக்க ரோஹித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், 32 வயதான கே எல் ராகுல் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு ஆடுகளத்தை தொட்டு வணங்கியது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கே எல் ராகுல் ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
53 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 8 சதம், 15 அரை சதம் என 2981 அடித்து உள்ளார். சராசரி 33.87 ஆக உள்ளது.
இதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ராகுல் முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
டெஸ்ட் அணியில் சர்பராஸ்கான், அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன் துருவ் ஜூரல், ருதுராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தான் ஓரம் கட்டப்படலாம் என்பதால் டெஸ்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்க ராகுல் தீர்மானித்து இருக்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.