தரமாக விடை கொடுத்த ரோகித், கோலி.. டிராவிட்டை கொண்டாடிய வீரர்கள்!
2007ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் குரூப் சுற்றில் வெளியேறிய இந்திய அணி, அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் அவரை மைதானத்திலேயே தூக்கி கொண்டாடினர்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றதுடன், இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
2007ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் குரூப் சுற்றில் வெளியேறிய இந்திய அணி, அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
அன்றைய உலகக்கோப்பையை இந்திய அணியின் கேப்டனாக இருந்து தோல்வியை எதிர்கொண்ட ராகுல் டிராவிட், இம்முறை பயிற்சியாளராக இருந்து டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ராகுல் டிராவிட் வெல்லும் முதல் ஐசிசி உலகக்கோப்பை இதுதான். ராகுல் டிராவிட் இம்முறை குழந்தையை போல் கொண்டாடியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தனது கடைசி போட்டியில் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
இதனால் இந்திய அணி வீரர்கள் பலரும் ராகுல் டிராவிட் உடனான கடைசி நிமிடத்தை இன்னும் சிறப்பாக மாற்றினர்.