மாபெரும் சாதனை படைத்து கிரிக்கெட் உலகை தெறிக்கவிட்ட ஐபிஎல் தொடர்

2023 ஆம் ஆண்டு 15390 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டதுடன்,  2024 ஐபிஎல் தொடரில் 13079 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது. 

மாபெரும் சாதனை படைத்து கிரிக்கெட் உலகை தெறிக்கவிட்ட ஐபிஎல் தொடர்

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ஆயிரமாவது சிக்ஸ் அடிக்கப்பட்டது. 

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐபிஎல் தொடரில் ஆயிரம் சிக்ஸர்கள் என்ற மைல்கல் கடக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  2024 ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்: ரசிகர்கள் ஷாக்!

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே தொடரில் ஆயிரம் சிக்ஸர்கள் 16,269 பந்துகளில் அடிக்கப்பட்டன. 

2023 ஆம் ஆண்டு 15390 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டதுடன்,  2024 ஐபிஎல் தொடரில் 13079 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிக போட்டிகளில் 200 ரன்கள் எடுக்கப்பட்டன. 

இந்த ஆண்டு இன்னும் 13 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp