மொத்த நம்பிக்கையையும் கலைத்த பும்ராஹ், குல்தீப் யாதவ்; வலுவான நிலையில் இந்திய அணி !!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை அமைத்து கொடுத்தார்.
இதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருவரும் சதமும் அடித்து அசத்தினர். ரோஹித் சர்மா 103 ரன்களிலும், சுப்மன் கில் 110 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்ததாக களத்திற்கு வந்த அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். படிக்கல் விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்திய அணி செய்த சாதனை... இனி இந்தியா பற்றி பேசவே முடியாது
இந்திய அணி விரைவாக ஆல் அவுட்டாகிவிடும் என கருதப்பட்ட நிலையில், 9வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பும்ராஹ் மற்றும் குல்தீப் யாதவ் கூட்டணி பேட்டிங்கிலும் இங்கிலாந்து அணிக்கு பெரிய சவாலாக திகழ்ந்து வருகிறது.
பும்ராஹ் மற்றும் குல்தீப் யாதவின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ள இந்திய அணி 255 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.