கோலியால் நடந்த சம்பவம் - ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்... ரசிகர்கள் மகிழ்ச்சி

மொத்தமே 10 நாடுகள் மட்டுமே தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை.

கோலியால் நடந்த சம்பவம் - ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்... ரசிகர்கள் மகிழ்ச்சி

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட முக்கிய காரணமே விராட் கோலி தான் என 2024 பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு பின் ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி கூறி இருக்கிறார். 

1900ஆம் ஆண்டில் முதல் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் இடம்பெற்றதுடன், கிரேட் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடின. 

அப்போது மற்ற நாடுகள் ஏதும் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்காததால் கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டது.

1900ஆம் ஆண்டுகளில் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. 

அதனையடுத்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் உருவானதுடன், 1950க்கு பின்னரே ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் வளரத் ஆரம்பித்தது.

மொத்தமே 10 நாடுகள் மட்டுமே தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை.

ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டு சேர்க்கப்பட குறைந்தது 75 நாடுகளில் அந்த விளையாட்டு விளையாடப்பட வேண்டும். 

டி20 போட்டிகள் வந்த பின்னர் அந்த நிலை மாறியதுடன், இப்போது தீவிரமாக டி20 கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயற்சி செய்தது. அதற்கு விராட் கோலி பெரிய அளவில் உதவி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 31.5 கோடி ரசிகர்கள் விராட் கோலியை பின்தொடரும் நிலையில்,  உலகிலேயே அதிக ரசிகர்களால் பின் தொடரப்படும் மூன்றாவது விளையாட்டு வீரர் விராட் கோலி ஆவார்.

கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

இந்த நிலையில் தான் ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலியின் புகழ் முக்கிய காரணமாக இருந்தாக கூறி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp