லங்கா பிரீமியர் லீக் தொடரை அபார வெற்றியுடன் தொடங்கியது கண்டி அணி

Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரை அபார வெற்றியுடன் தொடங்கியது கண்டி அணி

லங்கா பிரீமியர் லீக் 

Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் 5ஆவது சீசனில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து தம்பு்ள்ளை சிக்ஸர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. 

பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தம்புளை சிக்ஸர்ஸ் அணிக்கு தனுஷ்க குணத்திலக - குசல் பெரேரா தொடக்கம் கொடுத்தனர். 

இதில் தனுஷ்க குணத்திலக 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து குசல் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த பெர்னாண்டோ, ஹிரிடோய் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

இதனால் அந்த அணி 25 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த மார்க் சாப்மேன் மற்றும் சமிந்து விக்ரமசிங்க இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரைசதங்களைப் பதிவுசெய்ய, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைக் கடந்தது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் சாப்மேன் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 91 ரன்களையும், சமிந்து விக்ரமசிங்க 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களையும் சேர்த்து அசத்தினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தம்புளை சிக்ஸர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைக் குவித்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தசுன் ஷனக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சந்திமல் மற்றும் ஆண்ட்ரே ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரே முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸும் 5 ரன்களில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். 

பின்னர் சந்திமலுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் சந்திமல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த கமிந்து மெண்டிஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சந்திமலும் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனக இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினர்.  

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட் 37 ரன்களையும், தசுன் ஷனக 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தம்புளை சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரையும் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp