கம்பீர் இருக்கட்டும்.. அவரை கூட்டிட்டு வாங்க.. பிசிசிஐ திட்டத்தில் புதிய திருப்பம்!
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்காத நிலையில், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பவர்களில் கவுதம் கம்பீருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஒரே ஒரு தவறு... இங்கிலாந்து அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என்ன?
இந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லட்சுமணனை வைத்து இடைக்கால புதிய திட்டம் ஒன்றை பிசிசிஐ உருவாகியிருப்பதாக, பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரின் பின்னர் இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்பதுடன், ஜூலை 6ஆம் தேதி முதல் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அத்துடன், இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜூலை 27 ஆம் தேதி முதல் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கு புதிய பயிற்சியாளராக கம்பீர் இருக்க மாட்டார் என்றும் இதன் காரணமாக விவிஎஸ் லட்சுமணன் இந்தத் தொடருக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில், அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் துணைப் பயிற்சியாளர்களும் செல்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் புதிய பயிற்சியாளராககவுதம் கம்பீர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு கவுதம் கம்பீர் பயிற்சியளித்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் புதிய டி20 அணியை களமிறக்குவார் என்று நினைத்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றம் அளித்துள்ளது.