சாய் சுதர்சன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு - ஐபிஎல் மூலம் அடித்த அதிஷ்டம்!

ரஞ்சி தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முன்னுரிமை அளிக்கின்றது. 

சாய் சுதர்சன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு - ஐபிஎல் மூலம் அடித்த அதிஷ்டம்!

ரஞ்சி தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முன்னுரிமை அளிக்கின்றது. 

அந்த வகையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடிப்பார்கள் என தெரிகிறது. தற்போது டெஸ்ட் அணியில் விராட் கோலி, கில், ராகுல் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் ஆகியோர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.

இதே போன்று நிதீஷ் குமார் ரெட்டி ஆல்ரவுண்டராக இடம் பெறுவாரா என்ற கேள்வியும் இருந்துள்ளது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் சாய் சுதர்சனை இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசித்துள்ளது.

சாய் சுதர்சன் தற்போது ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி உள்ளதுடன், ரஞ்சி போட்டியிலும் அபாரமாக விளையாடி இருக்கிறார். இதேவேளை, இந்திய அணிக்காக விளையாடி பல ஆண்டுகள் ஆகும் கருண் நாயரையும் சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

சமீபகாலமாக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் பெயரும் டெஸ்ட் அணியில் கம்பக் கொடுக்கப் போகிறார். ரஜத் பட்டிதார் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும், பெரிய அளவு சரியாக செயல்படாததால் அதிரடியாக நீக்கப்பட்டார்.

தற்போது ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ரஜத் பட்டிதார் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதேபோன்று ஆர் சி பி அணிக்காக விளையாடும் படிக்கல் பெயரும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதுடன்,  தற்போது ஐபிஎல் தொடரில் இல்லை என்றாலும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்படுவார் என்ற தகவலும் உறுதியாகியுள்ளது.