இனி அப்படி செய்ய முடியாது.. கிரிக்கெட்டில் வரவுள்ள முக்கிய விதி மாற்றம்.. ஐசிசி அதிரடி தீர்மானம்

கிரிக்கெட்டில் வைடு பாலுக்கான விதியில் மிகப்பெரிய மாற்றம் வர இருப்பதாக வேகப் பந்துவீச்சு ஜாம்பவானான ஷான் பொல்லாக் தெரிவித்து உள்ளார்.

இனி அப்படி செய்ய முடியாது.. கிரிக்கெட்டில் வரவுள்ள முக்கிய விதி மாற்றம்.. ஐசிசி அதிரடி தீர்மானம்

கிரிக்கெட்டில் வைடு பாலுக்கான விதியில் மிகப்பெரிய மாற்றம் வர இருப்பதாக வேகப் பந்துவீச்சு ஜாம்பவானான ஷான் பொல்லாக் தெரிவித்து உள்ளார்.

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளரான ஷான் பொல்லாக் தென்னாப்பிரிக்கா அணிக்காக 829 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

21 முறை ஐந்து விக்கெட் ஹால் மற்றும் ஒரு முறை 10 விக்கெட் ஹால் சாதனையை செய்து டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 393 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். 

தற்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக அவர் உள்ள நிலையில், அந்த கமிட்டி தான் கிரிக்கெட்டில் முக்கிய விதிமாற்றங்களை செய்யும். அந்த வகையில் ஷான் பொல்லாக் ஐசிசி விதிகளில் செய்யப்பட உள்ள முக்கிய மாற்றம் ஒன்றை பற்றி கருத்து வெளியிட்டு உள்ளார்.

அண்மைகாலமாக, டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் அதிக வைடு பந்துகளை வீசி வருகின்றனர். பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிவரும்போது பேட்ஸ்மேன் தனது காலை நகர்த்தி வைக்கிறார். 

அப்படி செய்யும்போது பந்து வீச்சாளர் ஓடி வந்து கொண்டிருக்கும்போதே தான் பந்து வீச வேண்டிய இடம் எது என்ற குழப்பத்திற்கு ஆளாகி பந்தை வேறு திசையில் வீச அது பலமுறை வைடு ஆக மாறிவிடுகிறது.

ஆனால், இது பவுலர்களுக்கு பாதகமான ஒன்று என்பதால், ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் வைடு விதி குறித்து மாற்றம் ஒன்றை செய்ய உள்ளதாக ஷான் பொல்லாக் கூறி இருக்கிறார். 

அதன்படி, இனி பந்துவீச்சாளர் ஓடி வரும் போது பேட்ஸ்மேன் தனது இடத்தை விட்டு நகர்ந்தால், இந்த புதிய வைடு விதியின்படி தான் அம்பயர் முடிவு எடுப்பார் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். எனினம், அந்த விதி என்ன என்பது பற்றி ஷான் பொல்லாக் விளக்கம் அளிக்கவில்லை.

ஐசிசியின் புதிய விதிகளை அமல்படுத்தும் நடைதுறையின்படி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த விதி அமலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp