ஒரே ஆட்டத்தில் 7 சாதனைகளை உடைத்து எறிந்து ரோஹித் படைத்த இமாலய சாதனை!
அதிரடி ஆட்டம் ஆடி 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏழு முக்கிய சாதனைகளை படைத்து உள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி சேசிங் செய்தது. அயர்லாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதிரடி ஆட்டம் ஆடி 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
அத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4026 ரன்கள் அடித்து, பாபர் அசாமை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், ரோஹித் சர்மா டி20 உலக கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்ததுடன், இந்த போட்டியில் அவர் மூன்று சிக்ஸ் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார்.
மேலும், ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் செய்துள்ளதுடன், சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 4000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதாவது விராட் கோலி மற்றும் பாபர் அசாமை விட மிகக் குறைந்த பந்துகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.
அது அதுமட்டுமின்றி மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனித் தனியாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையையும் ரோஹித் சர்மா செய்துள்ளார்.
டி20 வரலாற்றில் சாதனை.. தோனியின் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா!
இதற்கு முன் விராட் கோலி மட்டுமே அந்த சாதனையை செய்திருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனாக தோனி 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக சாதனை படைத்து உள்ளார்.