லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு?
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி திருத்தப்பட வாய்ப்புள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி திருத்தப்பட வாய்ப்புள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படலாம்.
அதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
12.5 கிலோ சிலிண்டர் ரூ.3,127 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.1,256 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் ரூ.587 ஆகவும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.