கேப்டன் அவருதான்.... ஆனா முடிவு எடுக்கிறது யாரு... குழப்பத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய கேப்டனான 27 வயதான ருதுராஜ் உடன் இன்று தனது பயணத்தை தொடர உள்ளது.

கேப்டன் அவருதான்.... ஆனா முடிவு எடுக்கிறது யாரு... குழப்பத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய கேப்டனான 27 வயதான ருதுராஜ் உடன் இன்று தனது பயணத்தை தொடர உள்ளது.

தோனி உருவாக்கிய சிஎஸ்கே சாம்ராஜியத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேப்டனாக ருதுராஜ் இருக்க வாய்ப்பு உள்ளது. 

இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் களமிறங்கினாலும், முடிவு தோனி தான் எடுப்பார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

கேப்டன் ஆக ருதுராஜ் இருந்தாலும் தோனி தான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 2017ஆம் ஆண்டு இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி விராட் கோலிக்கு வழங்கினார்.

ஆனால் முக்கிய கட்டத்தில் விராட் கோலி ஓரமாக நிற்க தோனி தான் அனைத்து முடிவுகளுமே எடுப்பார்.

போட்டி எப்போது?... சிஎஸ்கே அணியின் முழு அட்டவணை.... முழு விபரம் இதோ!

2022 ஆம் ஆண்டு கேப்டனாக ஜடேஜா வந்த நிலையில் தோனி சில போட்டிகளில் எந்த முடிவையும் எடுக்காத நிலையில், சில போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இதனை அடுத்து தோனி முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்கினார்.

இதனையடுத்த, ஜடேஜாதனக்கு காயம் ஏற்பட்டு விட்டது என தெரிவித்து அந்த தொடரில் இருந்து விலகினார். 

இந்த நிலையில், இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் தோனி முழு பொறுப்பையும் ருதுராஜ்க்கு கொடுத்துவிட்டு ஒதுங்கி விடுவாரா இல்லை தோனியே அனைத்து முடிவுகளையும் எடுப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

எனினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு  சிஎஸ்கே அணியை தயார் செய்ய வேண்டுமென்றால் தோனி முதல் சில போட்டிகளில் ருதுராஜ்க்கு முழு சுதந்திரம் கொடுப்பார் என்றும், அதன் பிறகு தேவை ஏற்பட்டால் தீர்மானங்களை தோனி எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp