42 வயதில் முதல் இடத்தை பிடித்து அதிர விட்ட தோனி... மாஸ் ரெக்கார்டு!
2024 ஐபிஎல் தொடரில் தனது 42 வயதில் விளையாடும் தோனி இந்த ஆண்டு பேட்டிங் சராசரியில் முதல் இடத்தை பிடித்து அதிர விட்டு இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் தனது 42 வயதில் விளையாடும் தோனி இந்த ஆண்டு பேட்டிங் சராசரியில் முதல் இடத்தை பிடித்து அதிர விட்டு இருக்கிறார்.
42 வயதாகும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை ஆடிய 10 போட்டிகளின் 110 ரன்கள் பேட்டிங் சராசரியுடன் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
நடப்பு தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகிய தோனி அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷராக செயல்பட்டு வருகிறார்.
இதுவரை 8 போட்டிகளில் ஒவ்வொரு முறையும் கடைசி ஓவரிலோ அல்லது இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதோ தான் களத்துக்கு வருகிறார் தோனி
முதல் ஏழு போட்டிகளிலும் அவுட் ஆகாமல் 2024 ஐபிஎல் தொடரின் நாட் அவுட் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்று இருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக எட்டாவது போட்டியில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயன்று ரன் அவுட் ஆனார்.
அந்த வகையில் தோனி 110 ரன்கள் பேட்டிங் சராசரியுடன் 2024 ஐபிஎல் தொடரில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
அவரது ஸ்ட்ரைக் ரேட் 229 ஆக உள்ளதுடன், நடப்பு தொடரில் 100 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் துவக்க வீரர் ஜேக் பிரேசர்-க்கு (233) அடுத்த இடத்தில் தோனி உள்ளமை குறிப்பிடத்தக்கது.