சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமிலிருந்து திடீரென்று மனைவியுடன் வெளியேறிய தோனி.. என்ன நடந்தது?

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்  சீசன் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இருந்து தோனி குடும்பத்துடன் வெளியேறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமிலிருந்து திடீரென்று மனைவியுடன் வெளியேறிய தோனி.. என்ன நடந்தது?

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்  சீசன் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இருந்து தோனி குடும்பத்துடன் வெளியேறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி ரசிகர்கள் காட்டிய அன்பின் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். 

அதன்பின் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. 

இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் தோனி, தன்னுடைய சம்பளத்தை நான்கு கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளதுடன், இந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிக்கு விடை சொல்லிவிடுவார் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சென்னையை அடுத்த நாவலூரில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் இருந்து தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 

தோனி தனது குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையத்தில் சென்றதைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் சீசன் தொடங்க 10 நாட்களை உள்ள நிலையில், தோனி ஏன் சென்று விட்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் வெளியான தகவலில், ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. தோனியின் நெருங்கிய நண்பரின் அக்காவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறது.

இதற்காக டெஹ்ராடூன் சென்றுள்ள தோனி, அங்கு குடும்பத்தினருடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றார். இதற்காகத்தான் தோனி சென்னையை விட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.