மலேசியா கொலை சம்பவம்; கைதான இலங்கையர்கள் மீண்டும் விளக்கமறியலில்
மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மலேசியாவில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தக் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேலும் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.