ஓய்வே இல்லை... சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள்.. அஸ்வின் நீக்கப்பட வாய்ப்பு?
சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கவுஹாத்தியில் எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி ஆர்சிபி இடம் படுதோல்வியை தழுவிய நிலையில், ஓய்வே இல்லாமல் தற்போது சென்னையிலிருந்து கவுகாத்தி சென்றுள்ளது.
கவுகாத்தி ஆடுகளத்தில் பயிற்சி செய்யக்கூட சிஎஸ்கே வீரர்களுக்கு நேரமில்லா நிலையில், விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருப்பதால் ராஜஸ்தான் அணி வெற்றிக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
அத்துடன், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான கான்வே பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரப்படவும், அதனால் ஷாம் கரன் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், அஸ்வின் பிளேயிங் லெவனில் இருந்தால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். ஆனால் கவுஹாத்தி ஆடுகளத்திற்கு அது தேவையில்லை என்பதால், அஸ்வின் நீக்கப்படலாம்.
ஆனால் அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காக ஏற்கனவே விளையாடி உள்ளதால், அந்த அணியின் பலம், பலவீனம் என்ன என்று அவருக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாக அஸ்வின் இருப்பார் என்றும், அன்சூல் காம்போஜ் போன்ற வீரர் இம்பாக்ட் வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.
அத்துடன், விஜய் சங்கர் அல்லது ஷேக் ரஷீத் இரண்டு பேரில் ஏதேனும் ஒருவர் பிளேயிங் லெவனுக்குள் வரலாம் என்பதுடன், தோனி பேட்டிங் வரிசையில் முன்னதாக வந்து விளையாட வாய்ப்பு உள்ளது.