யார் தண்ணீர் கொடுத்தாலும் இனி குடிக்க மாட்டேன்.. உயிர் பிழைத்து வந்த மயங்க் அகர்வால்!
இந்திய வீரர் மயங்க் அகர்வால் இனி எப்போதும் எங்கேயும் மற்றவர்கள் கொடுக்கும் தண்ணீரை குடிக்கப் போவதில்லை என சொல்லாமல் சொல்லி உள்ளார்.

இந்திய வீரர் மயங்க் அகர்வால் இனி எப்போதும் எங்கேயும் மற்றவர்கள் கொடுக்கும் தண்ணீரை குடிக்கப் போவதில்லை என சொல்லாமல் சொல்லி உள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து "இனி வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவே கூடாது பாபா" எனும் ஹிந்தி திரைப்பட வசனத்தை எழுதி இருக்கிறார்.
சில வாரங்கள் முன்பு திரிபுராவில் நடந்த கர்நாடகா - திரிபுரா ரஞ்சி போட்டியில் பங்கேற்க சென்ற மயங்க் அகர்வால் அங்கிருந்து விமானத்தில் திரும்பினார்.
அப்போது விமானத்தில் தனக்கு முன் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தி இருக்கிறார். ஆனால், அதில் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் இருந்துள்ளது.
அது தெரியாமல் அவர் அருந்திய நிலையில் கடும் எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டு அவர் துடித்த நிலையில், விமானத்தில் இருந்து அவரை இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு வயிறு மற்றும் வாயின் உட்புறத்தில் காயம் ஏற்பட்டது.
பின்னர் அந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீண்ட அவர் மீண்டும் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி வருகிறார். அதற்காக மீண்டும் விமான பயணங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.