1574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும்  ஐபிஎல் மெகா ஏலம் பிசிசிஐ வைத்த டிவிஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததும், இந்திய நேரப்படி மதிய நேரத்தில் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.

1574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும்  ஐபிஎல் மெகா ஏலம் பிசிசிஐ வைத்த டிவிஸ்ட்

ஐபிஎல் மெகா ஏலம்

2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இந்த மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்தியா மற்றம் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்று மற்றும் நான்காவது நாள் ஆட்டம் நடைபெறும் அதே நேரத்தில் இந்த மெகா ஏலம் நடக்க உள்ளது. 

இதனையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததும், இந்திய நேரப்படி மதிய நேரத்தில் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.

மெகா ஏலத்தில் பங்கேற்காத வீரர்களுக்கு அடுத்த மினி ஏலத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்பதால் இந்தியாவை சேர்ந்த  1165 வீரர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த 409 வீரர்கள் என மொத்தமாக 1574 வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்து உள்ளனர்.

மொத்தமாக 204 வீரர்களுக்கான தேர்வு இந்த மெகா ஏலத்தில் நடைபெற உள்ளதுடன், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். 

மெகா ஏலத்திற்கு முன்பு பத்து அணிகள் இதுவரை 46 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணியில் ஹென்றிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கும், கோலி மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் தலா 21 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பஞ்சாப்,கொல்கத்தா, ஆர்சிபி நடப்பு சாம்பியன் கே கே ஆர், டெல்லி ஆகிய ஐந்து அணிகள் தங்களுடைய கேப்டனை விடுவித்து இருப்பதால் இந்த மெகா ஏலத்தில் புதிய கேப்டனை தெரிவு செய்ய உள்ளனர்.

இந்த மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் அதிக அளவுக்கு ஏலம் போவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தாலி, கனடா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின்  வீரர்கள் மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp