டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்: ரசிகர்கள் ஷாக்!
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பை ஜூன் 4ஆம் முதல், 30 வரை மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் இத்தொடரின் லீக் சுற்றில் விளையாடவுள்ளது
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இருக்கின்றன.
குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன.
குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால் ஆகிய அணிகள் உள்ளன.
அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும் பைனல் ஜூன் 29ஆம் தேதியும் நடைபெறும். லீக் சுற்றுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும்.
இந்த லீக் சுற்றுகள் அமெரிக்கா, கனடாவிலும், அரையிறுதி மற்றும் பைனல் கயானா, ட்ரினிடாட், பார்பரடாஸிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்து, இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் மைக்கேல் வான் கணித்துள்ளார்.
அதில், இந்திய அணி இடம்பெறவில்லை. இதுகுறித்து மைக்கேல் வான் வெளியிட்ட ட்வீட்டில், ''இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் தான், டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும்'' எனத் தெரிவித்துள்ளார்.