உலக கோப்பையில் கால் வைத்த மிட்செல் மார்ஷ் மீது வழக்கு... இந்தியா வர தடை கோரி மனு தாக்கல்!
உலக கோப்பையில் மிட்செல் மார்ஸ் கால் வைத்தது தம் மனதுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார்.
உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்ற நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலக கோப்பையின் மீது கால் வைத்து எடுத்து போட்டோ மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் கொதித்து போயுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக் கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஸ் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மிச்சல் மார்ஸ் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புகார் மனுவின் பிரதியை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த நபர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்திய ரசிகர்களின் மனதை புண்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிச்செல் மார்ஷ் இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க கூடாது என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் உலக கோப்பையில் மிட்செல் மார்ஸ் கால் வைத்தது தம் மனதுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.